இன்னும் 2 ஆண்டுகளில் சீன கடைகளில் தாய்ப்பால் விற்பனை

16/04/2011 18:49

 

சீன வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அக்ரோ உயிரி தொழில்நுட்ப பரிசோதனை கூடத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் லீ நிங் மனிதனை போன்று மரபணு செய்யப்பட்ட பசுவை உருவாக்கியுள்ளார்.
 
அந்த பசுவின் பால் தாய்ப்பால் போன்றது. மற்ற பசுகளின் பாலைவிட முற்றிலும் மாறுபட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்களை கொண்டது.
 
அதில் தாய்ப்பாலில் இருப்பது போன்று சக்திமிக்க லேக்டால்புமின், லேக்டோ பெரின், லைசோசும் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்தது.
 
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்களில் இருந்து பெறப்படும் தாய்ப்பால் இன்னும் 2 ஆண்டுகளில் சீன கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
 
அதற்கான சோதனை சீனாவில் உள்ள நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. அதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுவின் பால் தாய்ப்பால் போன்று மிகவும் சத்தானது என நிரூபனமாகியுள்ளது.
 
எனவே சீன அரசின் வேளாண் அமைச்சகம் அனுமதி அளித்த பிறகு இப்பால் விற்பனைக்கு வரும். இத்தக வலை ஆராய்ச்சியாளர் லீ நிங் தெரிவித்துள்ளார்