இப்தார் நிகழ்ச்சி 2009

15/09/2009 09:40

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

15-09-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி கடந்தத ஞாயிற்றுக் கிழமை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. அதில் மாநில மாணவரணி பேச்சாளர் சகோதரர் கலீலுர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். முஸ்லிம் மாணவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும், முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலை குறித்தும், மாணவர்களிடையே நிலவும் சமூகசீர்கேடுகள் குறித்தும், முஸ்லிம் மாணவர்களிடம் இருக்கவேண்டிய இஸ்லாமிய விழிப்புணர்வு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பின் மாணவர்களின் எதிர்காலக் கல்வி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கப் பட்டது.