இரண்டு நாட்களாக இராமநராதபுரம் மாவட்டத்தில் மழை

03/10/2010 11:49

ராமநாதபுரத்தில் நேற்று கொட்டித்தீர்த்த மழையால் ரோட்டில் தேங்கிய வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ராமநாதபுரத்தில் கடந்து இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கிய மழை, இன்றும் தொடர்ந்து கொட்டியது. இதனால் நகரின் பிரதான ரோடுகள் மழைநீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கின. பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. வாகனங்களும் ரோட்டில் தேங்கிய நீரில் தத்தளித்தன. ரோட்டில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்ததால், வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர். எதிர்பாராத இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை காலை முதல் மதியம் வரை முடங்கியது. மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை தவிர வேறு நகரின் அனைத்து ரோடு ,தெருக்கள் பார்வைக்கு தெரியாத வகையில் மூழ்கின. மழைநீர் வடிய போதிய வசதி இல்லாமல் போனதே இதற்கு காரணமாகும்.