இராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம்

02/09/2010 10:38

அமெரிக்க படைகளுக்கு இராக்கில் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்குவதே முக்கியக் குறிக்கோள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிபட தெரிவித்துள்ளார். 

 

இதனால் அதிபராக பொறுப்பேற்ற உடனேயே இராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

 

அத்துடன் இராக் நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்தி அந்நாட்டு பாதுகாப்பை அவர்களிடமே விடச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். இதன்படி இராக்கிலிருந்து ஒரு லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.

 

இராக்கில் போர் முடிவுக்கு வந்தது இராக்கின் நலனுக்கு மட்டுமல்ல அமெரிக்க நலன் சார்ந்தது. இராக் மக்களின் எதிர்காலம் கருதி அமெரிக்க எடுத்த நடவடிக்கைக்கு மிக அதிகம் செலவிட நேர்ந்துள்ளது.

 

இதற்காக இராக்கில் நமது ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. கடுமையான நிதி நெருக்கடியிலும் இராக்கிற்கு அதிகம் செலவிட வேண்டியதாயிற்று. இருப்பினும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே இப்போது இராக்கில் உள்ளனர். இராக் ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது, இராக் ராணுவத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு இவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இராக் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க ராணுவம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படும்.

 

2003-ம் ஆண்டு இராக்கின் மீது அமெரிக்க ராணுவம் படையெடுத்ததிலிருந்து இதுவரை 4,400 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 2006-ம் ஆண்டு சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டார்.

 

இப்போது அமெரிக்காவின் பொருளாதார சரிவு காரணமாக பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தப் பிரச்னையை உடனடியாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

 

இது தவிர,தற்போது அமெரிக்காவுக்கு சவாலாக உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்கும் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான சதி வேளைகளில் ஈடுபடும் இத்தகைய தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ளனர்.

 

இவர்களை முற்றிலுமாக ஒழித்து ஆப்கானிஸ்தானை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பயங்கரவாதிகளுக்கு தளமாக விளங்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து அல்-காய்தா அமைப்பினரை முற்றிலுமாக வெளியேற்றுவதே முக்கிய நோக்கம் என்றார் ஒபாமா.

 

ராபர்ட் கேட்ஸ் வருகை: இதனிடையே அமெரிக்க ராணுவம் திரும்புவதைக் கண்காணிக்க இராக்கிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் வந்துள்ளார். பாக்தாத்திலிருந்து 160 கிமீ தூரத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமான படைத்தளத்தில், கேட்ஸின் விமானம் செவ்வாய்க்கிழமை வந்திறங்கியது.  

 

இப்போது 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இராக்கில் உள்ளனர். போர் உச்சத்தில் இருந்தபோது 1.65 லட்சம் அமெரிக்க வீரர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. Dinamani

இராக்கில் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் ஆட்சியை ஒடுக்க அமெரிக்க ராணுவம் 7 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து போராடி வெற்றி கண்டது. "இராக் சுதந்திரம்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அமெரிக்கா மட்டுமின்றி இராக் சரித்திரத்திலும் மிகவும் முக்கியமான காலமாகும்.