இராமநதபுரம் கலவரம் - இரண்டு நாட்களுக்குப்பின் நதிப்பாலம் வழியாக அரசு பஸ் போக்குவரத்து துவங்கியது

13/09/2011 22:58

இராமநாதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்துவந்த கலவரத்தை தொடர்ந்து இன்று முதல் அரசு பேருந்துகள் மட்டும் நதிப்பாலம் வழியாக சித்தார்கோட்டை வரை இயக்கப்பட்டது. தெடர்ந்து நிலை கட்டுக்குள் வந்துள்ளதால் நாளை முதல் முழுமையாக பேருந்து போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் பட்டினம்காத்தான் பகுதியில் பேருந்து மீது கல் வீசப்பட்டதாக ஒரு தகவல் வருகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் ஒட்டுமொத்த வணிகமும் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சீராகிவிட்டால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.