இராமநாதபுரத்தில் இளம் தொழில்முனைவோர் மையம் தொடக்கம்

07/11/2010 13:18

 

 

ராமநாதபுரம்,  நவ.  4: தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுத்து தொழிலதிபராகவும் அத்தொழிலில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தவும் விரும்புபவர்களுக்காக ராமநாதபுரத்தில் ஹ்ங்ள் எனப்படும் இளம் தொழில் முனைவோர் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 

   ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தின் தலைவர் எஸ்.நல்லமுத்து (படம்) கூறியது:

 

   45 வயதுக்கு குறையாதவராகவும், தொழில் செய்து கொண்டிருப்பவர்களாகவும் அதனைப் பெருக்கும் ஆர்வம் உடையவராகவும் தொழில் தொடர்பான புதிய விஷயங்களை கற்றுக் கொள்பவராகவும் இருந்தால் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்கிறோம். அனுபவங்களை பகிர்ந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டு சந்தாவாக ரூ. 5000 வசூலிக்கிறோம்.

 

    ஆண்டுதோறும் தொழில் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள்,வர்த்தகப் பரிவர்த்தனைகள், விளம்பரங்களின் வகைகள், சுலபமாக கணக்கு எழுதும் முறை, தகவல் தொடர்புகள், தொழிலில் கணினியின் அவசியங்கள் இவற்றுக்காக கருத்தரங்குகள் நடத்தி தொழில் செய்வோரை தொழிலின் மீது ஆர்வம் பெற வைப்பதும் இந்த அமைப்பின் நோக்கம்.

 

   ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு தொழிற்சாலைகளை குழுவாக நேரில் சென்று அதன்

 

விவரங்களையும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்களின் தொழில் வளர்ச்சி விகிதம் ஆராயப்பட்டு தகுந்த அறிவுரைகளும் வழங்குவதுடன் தொழில் ஆலோசகர்கள் மூலமும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

 

    இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கமும்,ஆக்கமும் வழங்கி வளமான இந்தியாவை உருவாக்கும் மிகப்பெரிய சேவையினை செய்து வருகிறது ஹ்ங்ள் எனவும் எஸ்.நல்லமுத்து தெரிவித்தார்.

 

தொடர்பு தொலைபேசி எண்கள்: எஸ்.நல்லமுத்து (தலைவர்) 9443321025  

 

ஏ.முஜ்புர் ரகுமான், செயலர்- 9842820786, கார்த்திகேயன்- 9843007455.

 

 

Dinamani.com