இராமநாதபுரம் புதிய கலெக்டராக வி. அருண்ராய்

01/06/2011 16:22

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பதவி வகித்துவந்த ஹரிஹரன் மாற்றப்பட்டு புதிதாக வி.அருண்ராய் ராமநாதபுரம் கலெக்டர் இவர் கிருஷ்ணகிரி கலெக்டராக பணியாற்றி வந்தவர். அது மட்டுமின்றி மொத்தம் 29 மாவட்ட கலெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர். ஜெ ஆட்சிக்கு வந்த உடன் துவங்கப்பட்ட மாற்றம் கலெக்டர்கள் வரை வந்துள்ளது. மதுரை கலெக்டராக பணியாற்றி வரும் சகாயம் தொடர்ந்து மதுரையிலேயே பணியாற்ற உள்ளார்.