இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்

28/02/2010 16:21

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

28-2-2010

இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் நமதூரிலிருந்து ஒரு தனிப் பேருந்து சேவையை துவங்க கோரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தது.  

இன்று முதல் புதுவலசை இராமநாதபுரம் தனிப் பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு நம்பர் ஏதும் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 4 ரூட் தற்ப்போது தரப்பட்டுள்ளது. வரவேற்ப்பை தொடா்ந்து பேருந்து சேவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கப்படவோ வாய்ப்புள்ளது.

1. இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து காலை 5.30க்கு புறப்பட்டு கலை 6.15 மணிக்கு புதுவலசை வந்தடைகிறது.

2. அரண்மனையிலிருந்து காலை 10.30க்கு புறப்பட்டு முற்பகல் 11.15க்கு வருகிறது.

3. அரண்மனையிலிருந்து பகல் 2.35க்கு புறப்பட்டு 3.15 மணிக்கும்

4. அதேபோல் மாலை 4.25க்கு புறப்பட்டு மாலை 5.10 மணி ஆகிய நேரங்களில் வருகிறது.