முஸ்லிம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவன் பச்சிளம் குழந்தையை குத்திக் கொன்றான்

18/10/2010 15:15

நெல்லை அருகே இளம்பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க வந்த வாலிபர் அவரது 2 வயது மகனை கத்தியால் குத்தி கொலை செய்தான்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், இந்திராநகரை சேர்ந்தவர் ஆசிக்(27). பெங்களூரில் பலசரக்கு கடை நடத்திவருகிறார். இவரது மனைவி தபசும் இரண்டு வயது மகன் நியாஸ் ஆகியோர் தனியே வசித்துவந்தனர்.  காலை 8 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தபசும் வீட்டுவாசலில் நின்றபடி குடிக்க தண்ணீர் கேட்டான். அவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். அப்போது பின் தொடர்ந்து சென்ற அந்த வாலிபர் வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இளம்பெண் தபசுமிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். எனவே தபசும் சத்தம்போட்டபடி வெளியே ஓட முயற்சித்தார். அந்த நபர் கையில் வைத்திருந்த கத்தியால் தபசும் கழுத்தில் குத்தினான். இதில் அவர் காயமுற்று வெளியே ஓடிவந்தார். வீட்டுக்குள் நின்ற அந்த நபர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த தபசுமின் இரண்டு வயது ஆண் குழந்தை நியாசின் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்தான். அதற்குள் வெளியே கூடிய அக்கம்பக்கத்தினர் கூட்டம் கூடியது. ஜன்னல் வழியே பார்த்தபோது பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடந்தது. விசாரணையில் அவன், அதே பகுதியில் உள்ள இசக்கியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரது மகன் மணிகண்டன்(32) என தெரியவந்தது.திருமணமாகாதவன். சில ஆண்டுகளாக வெளியூரில் இருந்தவன் அண்மையில் சொந்த ஊர் வந்துள்ளான்.
போலீசார் அவனை கைது செய்துசிறையில் அடைத்தனர். கைதான மணிகண்டன், மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறி அவன் மீது குற்ற நடவடிக்கை எடுக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் திருமலையப்பபுரத்தில் மறியலில் ஈடுபட்டனர். 

செய்தி தினமலர், புகைப்படம் அபூ அப்துர் ரஹமான் முஸ்லிம் மெயில்ஸ் வாயிலாக.