இஸ்ரேல் இராணுவத்தின் கேவலமான அனுகுமுறை யூடியூபில் வீடியோ வெளியீடு

07/10/2010 15:39

மேற்க்கு வெஸ்ட்பேங்க் கிராமமான நூபாவைச் சேர்ந்த பெண் இஹ்சான் அல் தபாப்சி (35) இவர் கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்திற்க்கு எதிராக பாலஸதீன கைதிகளுக்கான அரசு சாரா சட்டரீதியாக எதிர்கொள்ளும் அமைப்பு ஒன்றின் மூலம் மக்களுக்க அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின் 2007 டிசம்பரில் பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர் 22 மாதம் இஸ்ரேலிய சிறையில் இருந்தார்.

இவர் சிறையில் இருந்தபோது அவரது கண்களை கட்டிவிட்டு இஸ்ரேலிய சிறைக்காவலர்கள் பாடல் போட்டுக்கொண்டு மது அருந்திக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். ஒரு பெண் என்றும் பார்க்காமல் அவரைச் சுற்றி அவர்மீது உரசும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். அவர் தன்னை வீடியோ எடுப்பதை தெறிந்துகொண்டு தன்னை சுவரின் அருகில் அணைத்தக் கொண்டு நின்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தல் வெளியாகி உள்ளது. இதை கண்டு அந்த பெண்மணி அதிர்ச்சியடைந்துள்ளார். தான் அவர்களிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் கேட்க்காமல் அதை தற்ப்போது இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளதாக தெறிவித்துள்ளார்.

அந்த வீடியோவை பாருங்கள்...

https://gulfnews.com/news/region/palestinian-territories/palestinian-woman-in-israeli-army-youtube-clip-humiliated-1.693020