இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன போராளி உயிரிழப்பு

04/11/2010 12:58

 

இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான அத்துமீரல் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நடந்த ஒரு ஏவுகனைத் தாக்குதலில் ஒரு பாலஸ்தீன விடுதலைப் போராளி உயிரிழந்தார். 27 வயதாகும் முஹம்மது அல் நம்நெம் என்ற பாலஸ்தீன இளைஞர் அல்கொய்தாவுடன் தொடர்புவைத்திருந்ததாகவும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக சினாய் தீபகற்பத்தில் செயல்பட்டு வருவந்ததாகவும், காஸா ஸ்ட்ரிப் பகுதியில் ஹமாசுடன் சேர்ந்து செயல் பட்டுவந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

 

ஏவுகணைத் தாக்குதலால் முகப்பெரிய அளவில் வெடித்து சிதறியதாகவம் அந்தப் பகுதி முழுவதும் குண்டு வெடித்த சப்தம் பலமாகக் கேட்டதாகவும் செய்திகள் தெறிவிக்கின்றன. மேலும் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஹமாஸ் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பாலஸ்தீன விற்பனையாளர் ஒருவர் குண்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் ஹமாஸ் செய்திக்குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.