ஈராக் போர் இரண்டாவதுமுறையாக டோனி பிளேயர் வாக்குமூலம்

22/01/2011 19:32

 

tony

கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற போருக்குள் அமெரிக்காவின் பின்னால் பிரிட்டன் சென்றமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பான விசாரணைகளில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஒரு தடவை வாக்குமூலம் அளித்திருந்தார். இப்போது மீண்டும் வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளார்கள். பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் அளித்த வாக்கு மூலத்தில் ஏற்பட்ட எதிரான கருத்துக்கள் காரணமாக இந்த மறுபதிவு அவசியமென கருதப்பட்டுள்ளது. அத்தோடு பிரிட்டனின் சட்டமா அதிபர் கோல்டன் சிமித்தும் மறுவாக்குமூலம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் போருக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் எதற்காக போருக்கு சென்றதென்ற உண்மைப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவது வழமை, அந்தவகையில் போருக்கான தற்றுணிபை பிளேயர் தப்பாக பயன்படுத்தியுள்ளாரா என்பதை விசாரணைகள் பதிவு செய்து கொள்ளும்.

அலைகள் 22-1-2011