ஈரானிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள்: யு.எஸ். அச்சம் - wikileaks

30/11/2010 16:05

ஈரானிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதாக அமெரிக்கா அச்சப்படுவதாக 'விக்கிலீக்ஸ்" வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஈரான் அரசு, வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசப்பட்டது.

அப்போது கடந்த 2005 ஆம் ஆண்டு 19 பி.எம்.-25 ரக ஏவுகணைகள், கப்பல் மூலம் ஈரான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ராக்கெட்டுகள் 2,500 கி.மீ. முதல் 4,000 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தவை ஆகும் என கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த ஏவுகணைகளின் புகைப்படங்கள் எதுவும் உள்ளதா? என கேள்வி எழுப்பிய ரஷ்ய அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியதாகவும் "விக்கிலீக்ஸ்" வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. webdunia.com