ஈரான் தாக்குதலை தடுக்க ஏவுகணைப் பாதுகாப்பு உடன்பாடு

20/11/2010 18:24

ஈரான் தாக்குதலை தடுக்க, ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இந்த தாக்குதலை தடுக்க ஐரோப்பா முழுவதும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் "நேட்டோ" நாடுகளின் மாநாட்டில் தான் இந்த உடன்பாடு காணப்பட்டது.

இந்த உடன்பாட்டின்படி ஏவுகணைகளை மறித்து தாக்கும் தடுப்பு ஏவுகணைகள் ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளில் அமைக்கப்படும்.

துருக்கியில் ஒரு ராடர் நிறுவப்படும். இந்த ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து கொள்ளும்படி ரஷியாவுக்கும் அழைப்பு விட "நேட்டோ" திட்டமிட்டு உள்ளது.

webdunia.com