உலகத்தை பயமுறுத்தி, பீதியில் ஆழ்த்த பின்லேடன் பயன்பட்டார் அமெரிக்கா மீது கேஸ்ட்ரோ குற்றச்சாட்டு

30/08/2010 13:52

அல்கொய்தா தலைவர் பின்லேடனை சி.ஐ.ஏ. (உளவுத்துறை) ஏஜெண்டாக இருப்பதற்காக அமெரிக்கா விலைகொடுத்து வாங்கி உள்ளது என்றும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் உலகத்தை மிரட்டி வைப்பதற்காக பின்லேடனை பயன்படுத்திக்கொண்டார் என்றும் கிïபா நாட்டின் முன்னாள் அதிபர் கேஸ்ட்ரோ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அந்த நாட்டின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

பின்லேடன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்டு என்பதையும் அவர் அமெரிக்காவின் கருவியாக செயல்பட்டார் என்பதையும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஆவணங்கள் நிரூபிக்கின்றன. புஷ் பீதியை கிளப்ப விரும்பிய போதெல்லாம், பின்லேடன் இணையதளத்தில் தோன்றி மிரட்டல் விடுவார். புஷ்சுக்கு பின்லேடன் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. விக்கிலீக்ஸ் டாட் ஆர்க் இணைய தளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் பின்லேடன் சி.ஐ.ஏ.ஏஜெண்டாக செயல்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இவ்வாறு கேஸ்ட்ரோ கூறினார்.