உலகப் பொருளாதாரம் தொடர்ந்தும் ஆரோக்கியமாக இல்லை- ஐ.நா

02/12/2010 20:05

 

இன்று உலகளாவிய நிலையில் சூல் கொண்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், அதனால் உண்டாகியுள்ள வறுமை உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணும் வல்லமை இன்னமும் உலகப் பொருளாதாரத்திற்கு வந்துவிடவில்லை என்ற உண்மையை இன்று வெளியான ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அடுத்த ஆண்டு 3.1 வீதமும் அதற்கு அடுத்த ஆண்டு 3.5 வீதமுமே உலகப் பொருளாதார வளர்ச்சி காணப்படும். இந்த வளர்ச்சி இன்றுள்ள சிக்கலை தீர்க்கும் வல்லமை கொண்ட வளர்ச்சி அல்ல என்றும் அது உண்மையைப் போட்டுடைத்துள்ளது. அமெரிக்கா – ஜப்பான் – ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பொருளாதார சுழர்ச்சி நிறைந்த நாடுகளின் கஜானாக்களில் வற்றிப் போயுள்ள எஞ்சிய பணமும் பெரும் உவிதலுக்கு உள்ளாகும் அவல நிலை வரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. உண்மை இப்படியிருந்தாலும் உள்ளுர் அரசியல் தலைவர்கள் தமது நாட்டின் பொருளாதாரம் நலமாக இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருவதும் கவனிக்கத்தக்கது. நேற்று முன்தினம் நடைபெற்ற டென்மார்க் எதிர்க்கட்சித் தலைவி கெலதொனிங் – மற்றும் டேனிஸ் மக்கள் கட்சி தலைவிய பியா கியாஸ்கோ இடையான விவாதத்தில் டேனிஸ் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதாக பியாகியாஸ்கோ மார்தட்டினார். ஆனால் இது தவறதன விளக்கம் என்பதை சுட்டிக்காட்ட அஞ்சி கெல தொனிங் சிமித் வேறு விடயங்களை பேசியதும் கவனிக்கத்தக்கது.

alaikal.com