உள்ளாட்சி தேர்தல் - ஓய்ந்தது பிரச்சாரம்

16/10/2011 17:17

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெருவதை தொடர்ந்து கடந்த 1 வாரமாக தேர்தல் பிரச்சாரம் கலைகட்டி இருந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் அவரது அணியினரும் வீடு வீடாகச் சென்று தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் ஓட்டு சேகரித்தனர். சிலர் ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஊரே சற்று அமைதியாக காட்சியளிக்கிறது. 

அது மட்டுமின்றி இந்த வருடம் புதுவலசை வேட்பாளர்களால் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் வெற்றிபெற்றால் அதை செய்வோம் இதை செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றனர். எது எப்படியோ யார் வெற்றிபெற்றாலும் ஊர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டால் சரி.

ஊராட்சி மன்றத்திற்கு 3 போட் போட்டி என்றால் கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் போட்டி அதில் நமதூரில் மட்டும் இரண்டு பேர். உள்ளுர் ஓட்டு யாராவது ஒருவருக்கு விழுந்தாலே வெற்றிபெற்று விடாலம் என்ற நிலை. மக்களின் மனநிலையைப் பொருத்தே வெற்றி வாய்ப்பு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை யார்? எந்தத் தெரு? எந்த ஜாதி? என்றெல்லாம் பார்த்து ஓட்டுப்போட்டால் இதுவரைக்கும் எப்படி உள்ளாட்சிகள் செயல்பட்டதோ அது போலதான் செயல்படும் எந்த முன்னெற்றத்தையும் காண முடியாது. யார் திரம்பட செயல்படுவார், யார் வெற்றிபெற்றால் மக்களுக்கு உள்ளாட்சி மன்றத்தின் மூலம் பயனுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவார் என்று மட்டுமே பார்க்க வேண்டும்.

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகக்கடமை எனவே அனைவரும் வாக்களிக்க முயற்சி செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ்.