உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

21/10/2011 14:01

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதலே பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொறு ஊர் காரர்களும் தமது ஊரில் யார் வெற்றி பெற்றார் என்ற விபரங்களை சேகரித்தவண்ணம் இருந்தனர். பெரும்பாலான தொகுதிகளை அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

நமதூர் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அணியே வெற்றி பெற்றுள்ளது. கவுன்சிலராக தேர்போகியைச் சேர்ந்த கிருஷ்ணன் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.

புதுவலசை ஊராட்சிக்கு போட்டியிட்ட சகோதரர் ஜபருல்லா கான் அவர்களின் மனைவி சகோதரி ஹாஜி சலீனா பேகம் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக

1. சகோதரர் ஜபருல்லா கான் அவர்கள் (9)

2. சகோதரர் பௌசுல்கான் அவர்கள் (7)

3. சகோதரி சாலிஹா அவர்கள் (5) 

4. சகோதரி வாகிதா அவர்கள் (4)

5. சகோதரர் மீரான் ஒனி அவர்கள் (3)

6. ராவியத்துல் பசரியா (6)

7. சகோதரர் அரவிந்த் அவர்கள் (8)

8. பால்ச்சாமி (தாவுகாடு) (1)

9. வடிவேலு (நாடார் தெரு போட்டியின்றி) (2)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.