ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்குழு வருகை - ஊர் முழுதும் தூய்மைப் பணி துவக்கம்

12/09/2012 09:16

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூர் ஊராட்சி துய்மை கிராமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. தூய்மை கிராமமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள  ஊராட்சிகளில்மாநில ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்குழுவினர் திடீர் ஆய்வு நடத்துவர். விதிமுறைக்கு உட்பட்டிருந்தால், அவ்வூராட்சிகள் அரசு விருதுக்கு தேர்வு செய்யப்படும்.

அதன் அடிப்படையில் நமதூருக்கு ஆய்வுக் குழுவினர் வரவிருப்பதால் நமதூர் ஊராட்சி மற்றத்தினர் முழுவீச்சில் ஊர் முழுதும் JCB  இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அகற்றியும், சாக்கடைகளை சீரமைத்தும் வருகின்றனர். ஆய்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் நமதூர் ஊராட்சிக்கு தமிழக அரசின் விருதும் வழங்கப்படும் என்றால் பெருமை தானே....