ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம்

30/08/2009 15:44

2009-08-30 15:59

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

30-08-09

நமதூர் ஊராட்சி மன்றத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அண்னா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேலைகள் பற்றியும் இனி வரும் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.  பக்கிராத்து ஊருணி வேலைகள் 50 விழுக்காடு நிறைவு பெற்றுவிட்டது.

நமதூர் பளைய பள்ளிக்கட்டிடத்தை ஒட்டிய கிழக்குத் தெருப் பாதையை சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. காயிதே மில்லத் நகரின் மையப்பகுதியில் இதற்க்கு முன் போடப்பட்ட சலையை ஒட்டி ஒரு புதிய சிமென்ட் சலை போடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு சிமென்ட் சலைகள் வரவிருக்கிறது.

மேலும் ஊராட்சிமன்ற நூலகம் ஒன்றும், விளையாட்டு மைதான திட்டம் ஒன்றும் வரவிருப்பதாக கூட்டத்தில் தெறிவிக்கப் பட்டது. காயிதேமில்லத் நகர் பஸ்ஸ்டாப் நிழல்குடை, சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரட்டை மின்கம்பங்கள் அகற்றுதல், காயிதேமில்லத் நகர் பஸ்ஸ்டாப்பில் நிருத்த மறுக்கும் 6எ பஸ்பற்றி போக்குவரத்துத் துறைக்கு தகவல் கொடுப்பது மற்றும் தெருவிளக்குகளை சீரமைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.