ஊழலில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது ஆப்ரிக்க நாடான சோமாலியா

27/10/2010 15:09

ஊழலில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது ஆப்ரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் 87 வது இடம் வகிக்கிறது இந்தியா!

Somaliaஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

உலக நாடுகள் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது. அதன் அடிப்படையில் ஊழல் புரியும் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது (ரேங்க் 178). இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் ஈடுபடும் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றால் அந்த நாடு வறுமையில் வாடுவதாக கூறப்படுகிறது.

178 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 34-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு இதில் 87 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது.

அதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.

ஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது டென்மார்க். இதற்கடுத்த இடத்தில் அதே புள்ளிகளுடன் நியூஸிலாந்தும், அடுத்த இடத்தில் 9.3 புள்ளிகளுடன் சிங்கப்பூரும், 9.2 புள்ளிகளுடன் பின்லாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.

ஸ்வீடன் 9.2 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. கனடா 8.9 புள்ளிகளுடனும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளன.

சோமாலியாவுக்கு 1.1 புள்ளி மட்டுமே பெற்று 178 வது ரேங்கில் உள்ளது.

ஆசிய கண்டத்தில் உள்ளவற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
 

 

Thatstamil.com