ஏகத்துவ மையம் விரிவாக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

12/06/2011 14:43

அன்பார்ந்த சகோதரர்களே! புதுவலசை ஏகத்துவ மையம் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். அதன் இறுதிக்கட்ட பணியாக சுற்றி அடைக்கும் பணி துவங்கியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் மேலே இரண்டு அடிகளுக்கு கம்பி வலையும் அதன் கீழே தகடு வைத்து அடைக்கப்பட்டு வருகிறது. அதன் புகைப்படங்களை கீழே பார்க்கலாம். மேலும் இந்த பணிக்காக பொருளாதாரத்தை அள்ளித்தந்த நமதூர் சகோதரர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெறிவித்துக் கொள்கிறோம்.

 

இன்னும் இன்வெர்டர் மற்றும் மைக்செட் வசதிகள் செய்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு ஒரு இமாம் வைத்து மதரஸா மற்றும் ஐவேலை தொழுகையை முறையாக நடத்துவதற்க்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அல்லாஹ் நம் காரியங்களை நமக்கு நிறைவேற்றித்தரப் போதுமானவன்.

 

மேலும் உங்கள் உதவிகளை எங்களுக்கு அனுப்பித் தாருங்கள், எதிர்கால சந்ததிக்கும் சத்திய இஸ்லாத்தை கொண்டு செல்ல உங்களுடைய பங்களிப்பை வழங்குங்கள். அல்லாஹ் உங்கள் பொருட்களின் மீது அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக.

 

அல்ஹம்துலில்லாஹ்.