ஏகத்துவமையம் விரிவாக்கப் பணிகள்

09/04/2011 10:10

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே....

 

அந்த ஏகஇறையோனின் மாபெரும் கிருபையால் புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ மையம் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூறையில் இயங்கிவந்தது. அதில் 5 வேலை தொழுகைகள், ஜும்ஆ தொழுகைகள், பெருநாள் தொழுகைகள் மற்றும் நூலகம் என அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வந்தது. முன்பைவிட மக்கள் அதிகம் வருவாதாலும் மதரஸா மற்றும் 5 வேலை தொழுகையை முறையாக நடத்துவதற்கும் கூறையை பிரித்துவிட்டு விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நமதூர் ஏகத்துவ சிந்தனையாளர்கள் பலரது உதவியால் சுமார் 45 ஆயிரம் ரூபாய் செலவில் அஸ்பெர்ஸ்டாஸ் சீட் பேடப்பட்டுள்ளது. மேலும் அதை சுற்றி அடைப்பதற்கும் 2 அடி உயர்த்தி தளம் போடுவதற்கும் சுமார் 30 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பபோதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் உங்களால் இயன்ற உதவியை எமக்கு அனுப்பித்தாருங்கள்.

 

புதுவலசை சகோதரர் சதக்கத்துல்லா கான் - 0091-9787186358

யு ஏ இ  சகோதரர் அப்துல் ஹலீம் - 050 8845461

குவைத் சகோதரர் நியாஸ் அஹமது - 0096555737603

 

ஆகியோரை இந்தமாத இறுதிக்குள் தொடர்புகொண்டு உங்கள் உதவிகளை தாராளமாக தந்துதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம், இதுவரை ஒத்துழைப்பு தந்து உதவிய நண்பர்களுக்கும் உதவும் மக்களுக்கும் அல்லாஹ் நிரந்தர மறுமைப்பலனை தந்தருள்வானாக, அவர்கள் பொருட்கள் மீது தன்னிரைவை ஏற்படுத்தித் தருவானாக.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள் தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன்)