ஏகத்துவம் என்றால் என்ன?

10/10/2010 16:12

ஏகத்துவம் என்றால் என்ன? 1

அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன்

தவ்ஹீத் (ஏகத்துவம்)

 

தவ்ஹீத் என்றால் ஓரிறை வழிபாடு என்பது பொருள். முஸ்லிம்கள் அனைவரும் ஓரிறையை
வழிபடுபவர்கள்தானே என்ற உங்களது எண்னம் நியாயமயனதே. ஏனென்றால் பெரும்பாலும் ஓரிறை என்பதை நாம் சரியாக புரிந்துகௌ;வதில்லை. இஸ்லாமிய மார்க்கம் என்பது அல்லாஹ்வால் மனிதசமுதாயம் எப்படி தன்னுடைய வணக்கவழிபாடுகளை மேற்கொள்வது, வியாபாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது, எப்படி சம்பாதிப்பது, எப்படி செலவு செய்வது, எப்படி ஆட்சி செலுத்துவது, குற்றத்திற்க்கான தண்டனைகள் என்ன, பாகப்பிரிவினை, நன்மையானவை எவை, தீயவைகள் எவை, எதை புசிப்பது, எப்படி ஆடை அணிவது, மக்களுடன் எப்படிப்பழகுவது, உறவினர்களிடம் எப்படி பழகுவது, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் செயல் எவை மற்றும் எதை பின்பற்றுவது யாரை பின்பற்றுவது போன்ற மனிதன் பூமியில் பிறந்தது முதல் அவன் மரணிக்கும் வரையிலான அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், அறிவியல் மற்றும் மரணத்திற்க்குப்பிந்திய மறுமை உள்ளிட்ட எல்லா செயல்களுக்கும் வழிகாட்டுவதற்க்காக தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் 
மூலம் வழிகாட்டப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இந்த மார்க்கம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.

 

இதற்க்காகத்தான் பல்வேறு வாரலாற்றுப் படிப்பினைகளோடும், அறிவியல் ஆதாரங்களோடும் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்க்குப் பின் வரும் சமுதாயங்களும் அறிந்து கொள்ளும் வகையில் அல்லாஹ்வால் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு; நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமைப்படுத்தப்பட்டது (அல் குர்ஆன் 5:3). நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட் அற்புதம் அல் குர்ஆன். 1430 ஆண்டுகளுக்குப் பிறகும் அற்புதம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

 

இரண்டாவதாக, உலகத்திலேயே ஒரு தனி மனிதருடைய வரலற்றை பதிவுசெய்ய கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களுடைய வரலாறு பதிவுசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று சொன்னால் அது முஹம்மது (ஸல்) அவர்களுடைய வரலாற்றுக்காகத்தான். இஸ்லாமிய அறிஞர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட முயற்ச்சியின் பயனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் அறிந்துகொள்ளவும், தவறான செய்திகளை அடையாளம் கண்டுகொள்ளவும் முடிகிறது. ஒருவர் நபி(ஸல்) அவர்களைப்பற்றிச் சொன்னால், அந்தச் செய்தியை யார் சொன்னது, அது எங்கிருக்கிறது என்று ஆய்வு செய்தால் உண்மையை கண்டுகொள்ள முடியும் அது முந்தைய காலத்தை விட இன்று கனினி உதவியால் மிகச் சுலபமானதாகி விட்டது.

 

அல்லாஹ்வை மட்டும் வணங்குவது, அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவது என்பது தான் சுருக்கமான தவ்ஹீதின் பொருள்.

 

இஸ்லாத்தின் அடிப்படைகள்

அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட திருமறையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும்தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இன்னும் இரண்டு மூலங்களை இமாம்கள் பெயரால் சில அறிஞர்கள் கூறிவருகின்றனர் அதில்தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

அவை என்ன –

1. திருமறைக் குர்ஆன்

2. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்

3. இஜ்மா (ஒருமித்த கருத்து)

4. கியாஸ் (ஒரு சட்டத்திலிருந்து பல சட்டம் எடுப்பது).

 

மதஹபு உட்பட ஏராளமான கிதாபுகள் இந்த இஜ்மா மற்றும் கியாஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்டதேயாகும்.

 

இந்த கடைசி இரண்டு மூலங்களும் பிக்ஹ் (ஆலமான விளக்கம்) எனும் பெயரால் பின் வந்த அறிஞர்கள் தங்களுக்கு கிடைத்த ஹதீஸ்(செய்திகளைக்) கொண்டு விளக்கம் அளித்தனர். அவற்றில் பல தவறுகளும் இருந்தன. காரணம் இஸ்லாம் மத்திய கிழக்கு முழுவதும் பறந்து விரிந்த காரணத்தாலும், சஹாபாக்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் இறப்புக்குப்பின்னும், இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட பல உள்நாட்டு குழப்பம், போர், சியாக்களின் தோற்றம் முதலான பல்வேறுகாரணங்களினாலும் தான் ஹிஜ்ரி 200களில் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டது. எந்த ஒரு தனி வரலாற்று ஆய்வாளருக்கும் முழுமையான சட்டமோ, அனைத்து மார்க்க சட்டங்களும் வகுக்க ஹதீஸ்களோ கிடைக்கவில்லை.  எந்த ஒரு ஹதீஸ் ஆய்வாளரும் அரபுலகம் முழுவதும் பயனித்ததில்லை. அவர்கள் சக்திக்கு உட்பட்டு தம் உடல் பளு, வாகன வசதி, ஆய்வுத்திறனின் அடிப்படையில் ஹதீஸ்களையும் அதைக்கொண்டு பல சட்டங்களையும் மக்களுக்கு விளக்கினர். ஒவ்வொரு அறிஞருக்கும் அவர்களுடைய விளக்கத்திற்குமிடையே ஏராலமான முரண்பாடுகளும் இருந்தன.

 

உதாரணமாக இன்று நம் வாழும் காலத்தில் பல்வேறு ஹதீஸ் கிரந்தங்கள் உள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் வைத்துக் (உதா புஹாரி) கொண்டு முழு சட்டத்தையும் சொல்லிவிட முடியுமா? முடியாது என யாவரும் ஒப்புக் கொள்வார்கள். இந்த இடத்தில் நாம் விளங்கிக் கொள்ளவேண்டியது என்ன வென்றால். எந்த மார்க்க அறிஞருக்கும் முழுமையான மார்கம் கிடைக்கவில்லை. ஆனால் காலத்தின் கட்டாயம் கருதிய அறிந்த அந்த அறிஞர்களின் உழைப்பின் பயனால் இன்று நம்மால் எல்லா அறிஞர்களின் தொகுப்புகளையும் வைத்து எந்த மார்க்க தீர்ப்பும் வழங்கிவிட முடியும். எல்லாப்புகளும் அல்லாஹ{ ரப்புல் ஆலமீனுக்கே.

 

மதஹபுகளின் வரலாற்றுப் பின்னனி

இதற்க்கிடையில் மதஹபுகள் எனும் பெயரால் பல அறிஞர்களின் கூற்றுகளும் சட்டங்களும்
மக்களால் பின்பற்றப்பட்டு வந்து அவற்றில் பெரும்பாலான மதஹபுகள் இன்று நடைமுறையில்
இல்லை. தற்போது உலகில் 4 மதஹபுகள் உள்ளன.

1. ஹனபி மத்ஹபு : அபூஹனீபா பின் அன்நுஃமான் பின் சாபித் (ஹிஜ்ரி 80-150).
2. மாலிக் மத்ஹபு : மாலிக் பின் அனஸ் (ஹிஜ்ரி 93-173)
3. ஷாபிஈ மத்ஹபு : இமாம் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாபிஈ (ஹிஜ்ரி 150-204)
4. ஹன்பலி மத்ஹபு : இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ஹிஜ்ரி 164-241)

 

இந்த நான்கு இமாம்களும் தமக்கென்று ஒரு மார்க்க சட்ட வழிமுறையை (மத்ஹபை) ஏற்படுத்தியதற்க்கான எந்த ஆதாரமும் இல்லை. இன்னும் இந்த மத்ஹபுகளுக்கிடையில் ஏராலமான முரண்பாடுகளும், வரலாற்று பிழைகளும், பல இடைச் செருகள்களும் உள்ளன. பிற்காலத்தில் இவர்களைப் பின்பற்றியவர்கள் சிலர் இமாம்களின் பெயரை பயன்படுத்திப் பல நூல்களை எழுதி அதை மதஹபுகளின் சட்டநுல்களாக ஆக்கிவிட்டனர். சுமார் 300 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடைச் செருகள்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் இந்தியாவில் வாழ்ந்த பல இமாம்கள் அடங்குவர்.

 

உலகில் அதிகமானவர்கள் பின்பற்றும் மதஹபு ஹனபியாகும். ஹனபி மதஹபில் இந்தியாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஸ், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சட்டம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியாளர்களின் காலத்தில் ஏராலமான நூல்கள் எழுதப்பட்டன அவற்றுல் துர்ருல் முக்தார், ரத்துல் முக்தார் மற்றும் ஆலம்கீரியா போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் ஆலம்கீரியா ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது. (ஒளரங்கசீப்பின் புனைப்பெயர் ஆலம்கீரியா)அதேபோல் ஷாபிஈ மதஹபின் சட்டநூலாக கருதப்படும் மஙனீ என்ற நூல் நம் தமிழகத்தின் கீழக்கரை இமாம் எழுதியது. இன்னும் ஏராளமான நூல்களும் அடங்கும். (அஹ்காமுன் முஸ்லிமீன் அரபுத்தமிழ் நூல், மவ்லீது, தரீக்கா, பால்கிதாபு, நூறு நாமா மற்றும் பல நூல்களும் தமிழர்களின் படைப்பே). இமாம் அபுஹனிபா (ஹனபி இமாம்) அவர்களால் எழுதப்பட்ட எந்த நூலும் இன்று கானக் கிடைக்கவில்லை என பாகிஸ்தானிய வரலாற்று ஆசிரியர் ஒருவர் சொல்கிறார். இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்பட்ட ‘அர் ரிஸாலா’ மற்றும் ‘உம்மு’ ஆகிய நூல்கள் எந்த ஷாஃபி மதரஸாவிலும் பாடத்திட்டமாக இல்லை.

 

இமாம் மாலிக் எழுதிய முஅத்தா என்ற ஹதீஸ் நூல், அதை மட்டும் வைத்து முழுமையான சட்டம் எடுக்க முடியுமா? முடியாது. அதுபோல் இமாம் ஹம்பலி எழுதிய அஹமது எனும் ஹதீஸ் நூல் சுமார் 30,000 ஹதீஸ்களைக் கொண்டுள்ளது. அதைமட்டும் வைத்து முழுமையான இஸ்லாமிய சட்டம் வகுக்க முடியுமா என்றால் முடியாது. இதில் இன்னொரு உண்மை என்ன வென்றால் இமாம் மாலிக் அவர்களின் மாணவர் ஷாஃபி, இமாம் ஷாஃபியின் மாணவர் ஹம்பலி இவர்கள் மூன்று பேர் பெயரிலும் தனி மத்ஹபு இருப்பதை பார்க்கலாம்.

 

இந்த இமாம்கள் காலத்திற்கெல்லாம் பல நூறாண்டுகள் பின் வந்தவர்கள் அந்த இமாம்களின் பேரில் முழுமார்கத்தையும் வகுக்க நினைத்து உண்டாக்கியதே (அனைத்து இடைச் செருகள்களும் கொண்ட) மத்ஹபு. அதற்க்கு அவர்கள் பயன்படுத்திய பெயர் மார்க்கம் அனுமதித்த (பெயர் மட்டுமே) இஜ்மா மற்றும் கியாஸ். ஒட்டுமொத்த ஹதீஸ் நூல்களையும் ஆய்வு செய்யாமல் நம்மால் ஒருமுடிவுக்கு வர இயலாது. குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் இஜ்மா, கியாஸ் சட்டம் எடுக்க முடியுமே தவிர வெளியிலிருந்து எடுத்தால் அது தவறான முடிவாகவே இருக்கும் அப்படி எடுத்ததின் விளைவுதான் தற்போதைய கொள்கை குழப்பத்திற்கு காரணம். எல்லா இமாம்களையும் சம அந்தஸ்துடன் பார்;த்திருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. புஹாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் அறிஞர்களை நாம் எப்படி வைத்திருக்கிறோம் அதே போல் இமாம் ஷாஃபி மற்றும் ஹனபியையும் வைத்தோம் என்றால் குழப்பங்கள் தீர்ந்துவிடும். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்க்காக பாடுபட்ட அறிஞர்கள் அவர்கள் தாமாக எந்த சட்டத்தையும் உருவாக்க முடியாது, உருவாக்கவும் இல்லை, அவர்களின் உழைப்பில்தான் இன்று இஸ்லாமிய மார்க்கம் முழுவடிவில் முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நாம் அனைத்து இமாம்களையும் சம அந்தஸ்தில் வைத்து மதிக்க கடமைப்பட்டுள்ளோம்.

 

மேலும் இதில் நம் கேள்வி என்ன வென்றால், நபி (ஸல்) எந்த மதஹபு, சஹாபாக்கள் எந்த மதஹபு, இமாம்கள் ஹனபி, ஷாபிஈ, மாலிகி மற்றும் ஹம்பலி எந்த மதஹபை பின்பற்றினார்கள். இவர்கள் எதை பின்பற்றினார்களோ அதுதான் சத்தியம், அனைவரும் அல்லாஹ்வின் தூதரைத்தான் பின்பற்றினார்கள். அல்லாஹ்வை மட்டும் எப்படி வணங்கவேண்டுமோ, அதேபோல் அல்லாஹ்வின் தூதரை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்.

 

யாரை? எப்படி பின்பற்றுவது?

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 33:21

 

அல்லாஹ் சொல்லக்கூடிய இந்த வசனத்திலிருந்தே நாம் யாரை பின்பற்ற வேண்டும் என தெளிவாகிறது. நீங்கள் எந்த செயலை செய்ய முன் வந்தாலும் இதை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் எப்படி செய்தார்களே அப்படி செய்ய வேண்டும். தொழுகையா, நோன்பா, ஜக்காத்தா, ஹஐ;ஐh, இதர வணக்கங்களா… மார்கத்தின் பெயரால் எதை செய்தாலும், நன்மை இருக்கிறது என நம்பி செய்தால் அது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) காட்டித்தந்தவையாக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்துக்கு பின் வந்த எத்தனையோ செயல்கள் மார்கத்தின் பெயரால் நடைமுறையில் இருப்பதை பார்க்கிறோம். அவை அனைத்தும் அல்லாஹ்வுடைய இந்த வசனத்திற்க்கு எதிரான செயல்கள். நாம் அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இல்லை என பறைசாற்றும் பாவமான காரியமாகும்.

 

(நபியே!) நீர் கூறும் ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். 3:31 மேலும் பார்க்க 2:170, 7:03, 7:158, 31:21, 39:55-58

 

அல்லாஹ் தன் திருமறையில் அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது என்றும் அவனது தூதரை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என கட்டளையிட்டபிறகும் நாம் மதஹபுகளை பின்பற்றுகிறோம், இமாம்களை பின்பற்றுகிறோம், சஹாபாக்களை பின்பற்றுகிறோம் மற்றும் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்வது அர்த்தமற்ற வாதமாகிறது. அல்லாஹ் தூதர்களை அனுப்பியது பின்பற்றுவதற்க்காகத்தான். அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் மட்டும் தான் பின்பற்றத் தகுதியானவர்கள்.

 

அல்லாஹ் எப்படிப்பின்பற்றுவது எனவும் கூறுகிறான்,

(கண்மூடித்தனமான சில நம்பிக்கைகளின் தொகுப்பாக இஸ்லாம் ஒரு போதும் இல்லை). தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான் (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 2.226

 

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். 4.82

 

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். 6.126

 

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான் இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான் அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13.3

 

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான் அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. 45.13

 

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? 47.24

 

இன்னும் ஏறாளமான வசனங்கள் மனிதனை சிந்திக்கத் தூண்டும் விதமாகவும், சிந்திக்கும் சமுதாயத்திற்க்கு இதில் சான்றுகள் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் மத்ஹபை பின்பற்றும் இமாம்கள் கேட்கிறார்கள் நாம் ஏன் குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்ய
வேண்டும்? இமாம்கள் ஆய்வு செய்யாமலா சட்டம் இயற்றினார்கள்? என்று. இதுபோல் ஒவ்வொரு இமாமையும் பின்பற்றத் தொடங்கினால் இஸ்லாம் கேழிக்கூத்தாக்கப் பட்டிருக்கும், ஏனென்றால் ஏராளமான இமாம்களின் அரும்பணியால்தான் இஸ்லாம் இன்றளவும் நமக்கு தூய்மையான வடிவில் கிடைத்திருக்கிறது. (அல்ஹம்துலிலிலாஹ்..)

 

இமாம் புஹாரியுடைய ஹதீஸ் அனைத்து தர மக்களாலும் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும் அவர் பெயரால் ஒரு மத்ஹபும் இல்லையே ஏன்? அதேபோல் எந்த இமாமாக இருந்தாளும் அவர்கள் தொகுத்த ஹதீஸ்களில் தம்முடைய சொந்த கருத்தாக ஒரு செய்தியும் இடம் பெற்றிருக்காது. இஜ்மா செய்கிறோம் கியாஸ் செய்கிறோம் என சொல்லி அந்த இமாமின் பெயரைப் பயன்படுத்தி புத்தகத்தை எழுதி அதன் மூலம் மக்களை வழிகெடுத்ததைத் தவிர இந்த இஜ்மா கியாஸ் ஆய்வாலர்கள் வேறு எதையும் செய்துவிடவில்லை.

 

இஸ்லாத்தின் பெயரால் புதிய நடைமுறைகள் (பித்அத்)

இன்னும் சிலர் மார்கத்தின் பெயரால் தம்முடைய பிழைப்பிற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார்கள். (இந்த இடத்தில் சில இமாம்கள் கோபப்படுவதுண்டு). மௌலீது, கத்தம், பாத்திஹா, தர்ஹாக்கள், போய், பில்லி, சூனியம், தஹடு, தட்டு, மற்றும் தாயத்து இவை எல்லாம் அவர்கள் வருமானத்திற்கான முதலீடுகள். இமாம்களுக்கு தரப்படும் சம்பளம் மிக மிக குறைவானது என நாமும் அறிவோம் அதேநேரத்தில், ஹலாலான முறையில் தனியாக ஓதிக்கொடுக்கும் இமாம்கள் இருக்கிறார்கள். மற்ற வேலை செய்து வருவாய் ஈட்டும் இமாம்கள் இருக்கிறார்கள். டீக்கடை, மளிகைக்கடை வைத்திருக்கும் இமாம்கள் இருக்கிறார்கள். நாம்முடைய ஆதங்கம், அல்லாஹ் அனுமதித்த ஏராளமான வழிகளில், வருமானத்திற்க்காக அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது எது? அல்லாஹ்வுடைய மார்க்கம். நாம் கேட்பது என்னவென்றால் இதல்லாம் மார்க்கத்தின் பெயரால் செய்ய இவர்களுக்கு அனுமதி வழங்கியது அல்லாஹ்வா? அல்லது அல்லாஹ்வுடைய தூதரா?

 

அது மட்டுமில்லாமல் சத்தியத்தை எடுத்துச் சொல்வதில்லை, மார்க்கம் படித்த ஒரு ஆலிம் வரதட்சணையை ஆதரிக்கும் விதமாக நடந்து கொள்வது, குற்ற்ங்களைக் கண்டும் காணாமல் போவது, மார்க்த்திற்க்கு முறனான காரியங்களில் ஈடுபடுவது கேட்டால் - ஜமாத், நிர்பந்தம் என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பது. காரணம் என்னவென்றால் அவர்கள் இமாமத்தை மட்டும் நம்பி வேறெந்த தொழிலும் செய்யாததால் மார்க்கத்தை விற்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதைக்கேட்டால் இமாம்களை திட்டுகிறார்கள் என்கிறார்கள். இந்தப் புதுமையான விசயத்தை பற்றிய அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரிப்பதை பாருங்கள்.

 

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸ_லுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் அஹ்ஸாப் 33:36)

 

அல்லாஹ்வுடைய மார்கத்தில் சுயமாக அபிப்ராயம் (20 ரக்காத் தராவிஹ் தொழுதால் நன்மைதானே, தஸ்பீஹ் தொழுகை தொழுதால் நன்மைதானே, மிஹ்ராஐ; நாளில் நோன்பு வைத்தால் நல்லதுதானே நாங்கள் தப்பா செய்கிறோம் என்று முடிவு) செய்ய முஃமினான ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமை இல்லை என்றால். இவை அனைத்தும் அல்லாஹ்வுடைய உரிமையாகிறது. மார்கத்தின் பெயரால் ஒரு வணக்கத்தை நமக்கு கற்றுத்தருவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிட வேண்டும். இதை மீறி மற்ற மனிதர்களின் கூற்றுக்கு கட்டுப்படுவதும் இணைவைத்தலாகிவிடும். நபி(ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்..

 

மார்க்கத்தில் எல்லா புதுமையும் பித்அத்தாகும். எல்லா பித்அத்தும் வழிகேடாகும். எல்லா வழிகேடுகளும் நரகத்திற்கு கொண்டு செல்லும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : நஸயீ

 

புஹாரி 7277 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.

 

புஹாரி 2697. நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

 

இவர்களின் இச்செயல் சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை பாருங்கள்

நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் (மற்றொரு அறிவிப்பாளர் வழியாக யூத, கிருத்தவர்கள் என்று வருகிறது) போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று)மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஏனெனில் அல்லாஹ் கூறினான்: (இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக,) மறுமை நாளில் தங்கள் பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையால் இவர்கள் யார் யாரையெல்லாம் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களின் பாவங்களையும் சுமப்பார்கள். (16:25)  7319 புஹாரி - அபூ ஹ{ரைரா(ரலி) அறிவித்தார்.

 

திருமறைக்கு எதிறான மதஹபுகள்

(வேதக்கருத்துக்களை மறைப்பதும் மாற்றுவதும் யூத கிருத்தவர்களின் செயல்) மதஹபுகளில் திருமறைக்கு எதிறான ஹதீஸ்களுக்கு எதிறான கருத்துக்கள் அடங்கியுள்ளது. உதா: (கடல்வால் உயிரினங்கள் அனைத்தும் ஹலால் செத்து ஒதுங்கினாலும் ஹலால் ஆனால் இரால், கணவாய், நண்டு ஒரு மதஹபுக்கு ஹராம், மற்றவருக்கு ஹலால்).
அல்லாஹ்வின் அதிகாரத்தில் மனிதனின் தலையீடு யூத, கிருத்தவர்களின் செயல். ஆல்லாஹ் கூறுகிறான்…

 

உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. 5:96

 

5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்கள், 'கருவேல இலை' ('கபத்') படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். எங்களுக்கு) அப+ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது 'அம்பர்' என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அப+ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.) புஹாரி

 

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹராரானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

 

9:31 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

 

இந்த இறைவசனம் சம்பந்தமாக நபித்தோழர் ஒருவர் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களிடத்தில். நாங்கள் முந்தைய மார்கத்தில் பாதிரியார்களையும், சந்நியாசிகளையும் வணங்கிக்கொண்டிருக்க வில்லையே எனக்கேட்டார். அதர்க்கு நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள், உங்கள் பாதிரியார்கள் ஹலால் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டீர்களா? ஆம் என்று அவர் பதிலலித்தார். உங்கள் பாதிரிமார்கள் ஹராம் என்று தடுத்ததிலிருந்து விலகிக்கொண்டீர்களா? என்றார்கள் அதர்க்கும் அந்த நபித்தோழர் ஆம் என்று பதிலலித்தார். அதுவே அவர்களை வணங்கியதர்க்கு போதுமானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எந்த ஒன்றையும் ஹலால் என அனுமதிக்கவும், ஹராம் என தடுக்கும் அதிகாரம் அல்லாஹ்விடத்திலிருந்து வரவேண்டுமே தவிர யாருடைய சொல்லையும் நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது (அது மதஹபாக இருந்தாலும், உலமாக்களாக இருந்தாலும்). அதுவும் இணைவைத்தல் என இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

 

தர்ஹா வழிபாடு (இறந்தவரை வழிபடுதல் யூத கிருத்தவ மற்றும் ஷியாக்களின் கொள்கை)

அரபு நாடுகளில் தர்கா இல்லை. ஏன் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களைவிட சிறந்த அடியார் யார்? நபி (ஸல்) அவர்களுக்கே தர்கா இல்லை. இஸ்லாத்தில் கபுர்களை கட்டுவதும், பூசுவதும் தடுக்கப் பட்டுள்ளது.

 

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள் அவர்களும் படைக்கப் பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். 16:20-21

 

நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது. 27:80

 

நபி(ஸல்)அவர்கள் மரணநேரத்தின் போது தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை
வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று கூறி எச்சரித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி). புஹாரி 435

 

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள்.. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி). புஹாரி 427

 

இதில் சில விதி விளக்கான செய்திகளும் சட்டங்களும் உள்ளது அதை தர்ஹா வழிபாட்டுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள். இங்கு வணக்கஸ்தலம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நாம் வணக்கஸ்தலமாக்கவில்லை, அந்த மக்கள் வழிபடுவதுபோல் நாங்கள் வழிபட வில்லை என சிலர் வாதிடலாம். இந்த இடத்தில் இணைவைத்தல் பற்றி கொஞ்சம் நாம் தெறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

இணைவைத்தலின் அடிப்படை

இணைவைத்தல் என்பது அல்லாஹ் அல்லாத மற்ற மனிதனையோ, மரங்களையோ, கற்களையோ வணங்குவது, அல்லாஹ்வுடைய சிறப்பான பண்புகளை அவைகளுக்கு உள்ளதாக நம்புவதுமாகும். நபி (ஸல்) அவர்கள் வணக்கஸ்தலம் என்று கூறுகிறார்கள் (புஹாரி 427)

 

ஏனென்றால் அன்றைய கால மக்கள் தொட்டு இன்றைய இணைவைப்பாளர்கள் வரை எந்த சமுதாயத்திற்க்கும் முஸ்லிம்களைப் போன்ற வணக்க வழிபாட்டு முறை கிடையாது. அவர்கள் தம் தெய்வங்களாக கருதியவைகளுக்காக நேர்ச்சை, பிரார்த்தனை, அறுத்து பலியிடுதல், அவைகளிடம் பாவ மண்ணிப்புத் தேடுதல், தமக்கு அறியாத புறத்திலிருந்து உதவி செய்யும் என நம்புவது, அவைகளுக்கு காது கேட்கும் என நம்புவது, தம்மை பாதுகாப்பவைகளாக கருதிக்கொள்வது போன்றவைகளாகத் தான் இருந்து வருகிறது. இந்த அனைத்தும் இறைவனின் அதிகாரம், இறைவனின் பண்புகளாகும். மேலும் நேர்ச்சை, பிரார்த்தனை, அறுத்து பலியிடுதல் மற்றும் சத்தியம் செய்தல் போன்றவை இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்காக மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களாகும்

 

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை  செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக. 2.186

 

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் (அறுத்து பலி) கொடுப்பீராக. 108.2

 

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள் (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். 76.7

 

இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள் அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். 16.91

 

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான். (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். 5.89

 

இந்த அனைத்து காரியங்களையும் நாம் தர்ஹாக்களில் நடப்பதைப் பார்க்கிறோம். பார்க்க பாகம் 2 கீழே உள்ள லிங்கில் கிலிக் செய்யவும்.

 

மக்கா காபிர்களின் செயல்கள் (மற்றும் யூத, கிருத்தவ, பாரசீக இணைவைப்பாளர்களின் செயல்கள்)