ஐ.நா சபை‌க்கான இ‌ந்‌திய தூதர‌ர்க‌ளை உளவுபா‌ர்‌த்த அமெ‌ரி‌‌க்கா

30/11/2010 16:09

ஐ.நா சபை‌க்கான இ‌ந்‌திய தூதர‌ர்க‌ள் கு‌றி‌த்து ஒ‌வ்வொரு ‌‌நி‌மிடமு‌ம் அமெ‌ரி‌க்கா உளவு பா‌ர்‌த்ததாக அ‌தி‌ர்‌ச்‌சி தகவலை ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் வெ‌ளி‌யி‌ட்டிரு‌க்‌கிறது.

ஐ.நா சபை‌யி‌ன் பாதுகா‌ப்பு கவு‌ன்‌சி‌லி‌ல் ‌நிர‌ந்தர உ‌று‌ப்‌பினராகு‌ம் தகு‌தி உ‌ள்ளதாக தன‌க்குதானே‌க் கூ‌றி‌க்கொ‌ண்டது இ‌ந்‌தியா எ‌ன்பது அமெ‌ரி‌க்க அயலுறவு‌ அமை‌ச்ச‌ர் ஹ‌ிலா‌ரி ‌‌கி‌ளி‌‌ண்ட‌னி‌ன் வ‌ர்ணனையாகு‌ம்.

இது உ‌‌ட்பட அமெ‌ரி‌க்க அயலுறவு‌‌த்துறை ‌திர‌ட்டிய இ‌ந்‌திய தகவ‌‌ல்களை ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் வெ‌ளி‌யி‌ட்டிரு‌க்‌கிறது. ஐ.நா பாதுகா‌ப்பு சபை மறு‌சீரமை‌ப்பு கு‌றி‌த்த மு‌க்‌கிய ‌விடய‌ங்களை அமெ‌ரி‌க்கா ‌திர‌ட்டி‌யிரு‌ப்பது அ‌ம்பலமா‌‌கியு‌ள்ளது.

இ‌ந்‌தியா, ‌பிரே‌சி‌ல், ஜெ‌ர்ம‌‌னி, ஜ‌ப்பா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளி‌ன் ஐ.நா ‌பிர‌தி‌நி‌திக‌ளையு‌ம் அமெ‌ரி‌‌க்கா உளவு பா‌ர்‌த்தது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இதனா‌ல் அமெ‌ரி‌க்காவுடனான உறவு பா‌தி‌க்க‌ப்படாது எ‌ன்பது இ‌ந்‌‌தியா‌வி‌ன் கரு‌த்தாகு‌ம்.

மேலு‌ம் இ‌ஸ்லா‌‌மிய நாடுக‌ளி‌ன் அமை‌ப்புகளை சே‌ர்‌ந்தோ‌‌ரி‌ன் பெய‌ர்க‌ள், அவ‌‌ர்க‌ள் பய‌ன்படு‌த்து‌ம் கட‌ன் அ‌ட்டைக‌ள், தொலைப‌ே‌சி எ‌ண்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட த‌னிநப‌ர் ‌விவர‌ங்‌களையு‌ம் அமெ‌ரி‌க்க அயலுறவு‌த்துறை சேக‌ரி‌த்து‌ள்ளது.

ஐ.நா சபை‌யி‌‌ல்‌ ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர்களாக உ‌ள்ள ‌சீனா, ‌கியூபா, எ‌கி‌ப்து, இ‌ந்தோனே‌சியா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ளி‌ன் ‌விவர‌ங்களையு‌ம் அமெ‌ரி‌க்க அயலுறவு‌த்துறை சேக‌ரி‌த்ததாக ‌வி‌க்‌கி‌லீ‌‌க்‌ஸ் அ‌ம்பலமா‌க்‌கி‌யிரு‌க்‌கிறது.

இதனையடு‌த்து ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் ‌மீது ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப் போவதாக அமெ‌ரி‌க்கா தெ‌ரி‌வி‌த்‌து‌ள்ளது.

இ‌ந்‌தியா - அமெ‌‌ரி‌க்கா இடையேயான அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கு‌றி‌த்து‌ம் அமெ‌ரி‌க்கா தகவ‌ல்களை சேக‌ரி‌த்து‌ள்ளது. இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் கு‌றி‌த்து அணு‌வி‌நியோக குழு‌வி‌ல் உ‌ள்ள நாடுக‌ள் நட‌‌த்‌திய ‌விவா‌த‌ம் கு‌றி‌த்து‌‌ம் தகவ‌ல்க‌ள் சே‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் எ‌ச்ச‌ரி‌க்கையையு‌ம் ‌மீ‌றி ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸ் இணையதள‌ம் ரக‌சிய‌ங்களை அ‌ம்பல‌ப்படு‌த்‌தி‌யிரு‌ப்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. webdunia.com