ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இல்லை: அமைச்சர் அறிவிப்பு

08/11/2010 13:55

அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இல்லை என்று ஆப்கானிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜல்மே ரசூல் கூறியதாவது,

ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இல்லை என்று என்னால் கூற முடியும். ஏனென்றால், ஒசாமா இங்கே இருந்தால் அவரை எப்படியும் கண்டுபிடித்திருப்போம். அவர் ஆப்கானில் இல்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தீவிரவாதிகளின் இலக்காக பாகிஸ்தான் திகழ்கிறது என்றும் கூறியுள்ளார் அவர்.

oneindia.com