ஓரங்களில் குறையும் பூமி...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

15/10/2012 22:52

8 ஓரங்களில் குறையும் பூமி

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
 
14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.
 
ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
 
பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன் திருக்குர்ஆன் 13:41
 
.அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். 'பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்' என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? திருக்குர்ஆன் 21:44
 
திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

9 பூமியைத் தொட்டிலாக

திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.
 
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். திருக்குர்ஆன் 20:53
 
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். திருக்குர்ஆன் 43:10
 
பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? திருக்குர்ஆன் 78:6,7
 
பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்க ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
 
வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்க ராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டில் இட்டு ஆட்டும் போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.
 
பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! திருக்குர்ஆன் 17:37
 
மனிதன் ஆகாயத்தில் லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றை எல்லாம் அறியும் திறன் பெற்றிருக்கிறான். சென்று வரும் அளவுக்கு ஆற்றலும் பெற்றிருக்கிறான்.
 
ஆனால் அவன் வசிக்கின்ற பூமியில் பெரிய அளவுக்கு அவன் இன்னும் ஊடுறுவிச் செல்லவில்லை. மிக அதிகமாக அவன் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டர் தூரம் தான்.
 
3 கிலோ மீட்டர் ஆழத்திற்குக் கீழே இன்னும் மனிதன் சென்றடையவில்லை. சென்றடைய முடியாது என்றும், சாத்தியமற்றது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல ஏற்கத்தக்க காரணங்களையும் கூறுகிறார்கள்.
 
விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்பதை இவ்வசனத்தின் மூலம் சொல்கின்றது.
 
உலகின் மிக உயரமான மலை இமய மலையாகும். இம்மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இத்தகைய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட முடியும். ஆனால் அந்த உயரத்திற்குக் கீழே செல்ல முடியுமா? என்றால் ஒருக்காலும் சாத்தியமே ஆகாது. அதிகபட்சம் மனிதன் பூமிக்கு அடியில் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டருக்கும் குறைவானவையே.
 
'நீ மேலே போகலாம்; இன்ன பிற சாதனைகள் நிகழ்த்தலாம்; உன் காலுக்குக் கீழே ஒரு நீண்ட மலை உயரத்திற்குப் போக முடியுமா? என்றால் போக முடியாது' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் சொன்னதை இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச் சொல்லும் அதிசயத்தைப் பார்க்கிறோம். இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்குச் சான்றாகும்.

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.திருக்குர்ஆன் 23:18
 
பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.
 
இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580ல் தான் கண்டறிந்தனர். சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.
 
இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.
 
பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

 


  நபிகள் நாயகம்(ஸல்)மக்காவுக்குத் திரும்ப வருவார்கள் என்ற முன்னறிவிப்பு.

 

Play Without Downloading  

Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ