ஓரினச் சேர்க்கையை நோய் என்று கூறிய குலாம் நபி ஆசாத்துக்கு கண்டனம்

05/07/2011 15:07

ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானது. அது ஒரு நோய் என்று கூறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த ஜில்லா பரிஷத் தலைவர்கள் மற்றும் மாநகர மேயர்கள் மாநாட்டில் பேசிய குலாம் நபி ஆசாத், ஓரினச்சேர்க்க என்பது இயற்கைக்குப் புறம்பானது, அது ஒரு நோய் என்று கூறியிருந்தார்.

இந்த நோய்க்கு எதிராக இந்திய சமூகம் போரிட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இந்த நோய் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைப்பதை அனுமதிக்கக் கூடாது. இப்படிப்பட்டவர்களால் இந்தியாவில் சமூக கட்டமைப்பு சீரழிந்து போய் விடும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு குலாம் நபி ஆசாத்தின் துறையின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com

சமூக கட்டமைப்பை சீர்குழைக்கும் இது போன்ற எதிர்ப்புக்கெல்லாம் கண்டனம் தெரிவித்து மாணங்கெட்டவர்களை வளர்க்கத்தான் எய்ட்ஸ் கட்டுப்படாட்டு அமைப்பு உதவுமே தவிர தடுக்க உதவாது.