கடாபி பதவி விலகும் வரை கூட்டுப்படை தாக்குதல் நீடிக்கும்: ஒபாமா, கேமரூன் அறிவிப்பு

15/04/2011 19:06

 

 
கடாபி பதவி விலகும் வரை கூட்டுப்படை தாக்குதல் நீடிக்கும்: ஒபாமா, கேமரூன் அறிவிப்பு லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்து வரும் கடாபி பதவி விலகக்கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியாளர்கள், சில முக்கிய நகரங்களை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து அந்நகரங்களை மீட்க, கடாபி ஆதரவு ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தது.
 
இதில் அப்பாவிகள் பலியானதால், அவர்களை காப்பாற்ற, அமெரிக்கா உள்ளிட்ட `நேட்டோ' கூட்டுப்படைகள் லிபியா மீது தாக்குதலை தொடங்கின. 3 வாரமாக இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
 
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கையில், சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்து வரும் லிபியா அதிபர் கடாபி பதவி விலகும் வரை கூட்டுப்படை தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

மாலைமலர்