கத்தார் கடலில் மீன் பிடித்த 28 இந்தியர்களுக்கு ஜெயில் தண்டனை

06/11/2010 15:37

இந்தியாவை சேர்ந்த 28 மீனவர்கள் சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் 6 படகுகளில் கத்தார் நாட்டு கடலில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தனர்.

அவர்களை கத்தார் நாட்டு போலீசார் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்து, வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு கத்தார் கோர்ட்டு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா 5 ஆயிரம் கத்தார் ரியால் (சுமார் 62 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனம் அவர்களின் விடுதலைக்கு முயன்று வருகிறது. தினந்தந்தி