கந்துவட்டி, ரவுடிகள், நிலமோசடி செய்தோர் என 688 பேரை கைது செய்ய முடிவு

12/07/2012 15:43

:ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், கந்துவட்டி, நிலமோசடி என பட்டியல் தயாரித்து 688 பேரை, விரைவில் கைது செய்ய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரத்தில் 98, பரமக்குடி 101, கமுதி 25, கீழக்கரை 26, திருவாடானை 40, முதுகுளத்தூர் 30 என மொத்தம் மாவட்டத்தில் 358 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். இதேபோல் கந்துவட்டி 91, நிலமோசடி 62, நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் 8, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் 41, சீட்டு விளையாட்டு 10, குடிபோதையில் தகராறு செய்தோர் 85, பிரச்னைகளை தூண்டிவிடுவோர் 13, அமைதிக்கு பங்கம் விளைவிப்போர் 20 என மொத்தம் 688 பேரின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். ஸ்டேஷன் வாரியாக ஒரிரு தினங்களில் கைது படலம் துவங்க உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

dinamalar.com