கற்பழிப்புகளுக்கு காரணம் சினிமாவும் டிவியும் தான், திருமண வயது வரம்பை குறைக்க வேண்டும் – ஹரியான மஹாபஞ்சாயத்!

08/10/2012 21:14

மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் கற்பழிப்புகளுக்கு சீனிமாக்களும் டிவிக்களுமே காரணம், அதில் காட்டப்படும் ஆபாச காட்சிகளால் சிறுவயதிலயே இளைஞர்களும் இளைஞிகளும் பாலியல் ரீதியாக தூண்டப்படுகின்றது என ஹரியான மாநில மஹா பச்சாயத் குற்றம் சாட்டியுள்ளது.

டிவி மற்றும் சீனிமாவை கண்டித்ததுடன் திருமண வயது வரம்பை குறைக்க வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது.

திருமண வயது வரம்பை குறைப்பதன் மூலம் இளம் வயதில் பாலியல் ரீதியாண உணர்வுகள் தூண்டப்படுபவர்கள் திருமணத்தின் மூலம் அதை பூர்த்தி செய்து கொள்வார்கள் இதனால் நாட்டில் கற்பழிப்புகள் குறையும் எனத் ஹரியான மாநில மஹா பச்சாயத் கூறியுள்ளது.

மேலும் இது குறித்து முடிவு எடுக்க Gohana என்ற கிராமத்தில் கூட்டத்தை கூட்ட இருப்பதாக மஹா பஞ்சாயத் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த கிராமத்தில் தான் சமீபத்தில் ஒரு பெண் நான்கு நபர்களால் கற்பழிக்கப்பட்டார்.