கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு

20/09/2009 15:48

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

20-9-2009

தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான பெயர் பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணி நமதூர் மதரஸா வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஏதேனும் வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்தால் வாரிய அட்டையை அடையாளத்திற்க்காக கொண்டு செல்லவேண்டும். அல்லது குடும்ப அட்டையை எடுத்துக்கொண்டு சென்று, அங்கு அவர்கள் தரும் படிவத்தை நிறப்பி, குடும்பத் தலைவர் அல்லது தலைவியுடன் ஏனைய குடும்ப உறுப்பினர்களும் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. இத்திட்டத்தின் கீழ் குடும்பத்திற்க்கு ரூபாய் ஒரு லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு செய்யப்படும்,

2. குறிப்பிட்ட 51 நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்து கொள்ளலாம். 

3. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 6 மருத்துவ மனைகளில் இந்த காப்பிட்டின் கீழ் மருத்துவ சேவை நடைபெரும் பெரிய நகரங்களில் 15 மருத்துவ மனைகளில் நடைபெரும். அங்கீகரிக்கப் பட்ட மருத்துவ மனைகள் பற்றி அறிய 18004252670 என்ற தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்.

4. இக்காப்பீட்டின் கால அளவு 4 வருடம்.

5. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டுவருமாணம் ரூபாய் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்

6. தாய் தந்தை தவிர குடும்ப உறுப்பினர்களில் 25 வயதுக்கு மேற்பட்டவராக ஒரு ஆண் உறுப்பினா் இருந்து அந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் விண்ணப்ப படிவத்தை கிராம நிர்வாக அதிகாரியிடம் (வி. எ. ஓ) கையெழுத்து பெற்று வரவேண்டும்.