கலைஞர் வீட்டுவசதி திட்டம் - புதுவலசையில் 37 வீடுகள் கட்ட ஒப்புதல்

22/04/2010 16:11

 

22-4-2010

கலைஞர் வீட்டுவசதி திட்டம் - புதுவலசையில் 37 வீடுகள் கட்ட ஒப்புதல்

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி திருச்சியில் தமிழக அரசு சார்பில் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை முதல்வர் துவங்கிவைத்தார். இத்திட்டம் பற்றி முன்னதாகவே நம் இணையதளத்தில் செய்தி வெளியிட்டும் இருந்தோம். இத்திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் சுமார் 6 இலட்சம் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கான தகுதியாக அரசு சார்பில் கூறப்படுபவை, வீடு இல்லாதவர்களாக இருக்கவேண்டும், வாடகை வீட்டில் வாழ்பவர்கள், வீடு கூறைவீடாக 1 வருடத்திற்க்கு மேல் அதே வீட்டில் தங்கியிருந்து வீட்டு வரிசெழுத்தி வந்தவர்கள் ஆகியோர் தகுதி வாய்ந்தவர்கள். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளின் செந்த நிலத்தில் அரசு வீடுகட்டித் தரப்படும்.

இந்த அடிப்படையில் நமதூரில் ஏற்கனவே சுனாமி திட்டத்தின் கீழ் கடற்கரை மற்றும் தாவுகாட்டுப் பகுதியில் அதாவது கடலில் இருந்து 1000 மீட்டர் தொலைவில் வாழும் வீடுஇல்லாத அல்லது கூறைவீடு உள்ளவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் அவர்கள் சொந்த இடத்திலேயே சுமார் 60 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் இன்னும் சில வீடுகளின் வேலைகள் நடைபெற்று வருகிறது.

கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சுனாமி திட்டப் பகுதியான 1000 மீட்டருக்கு அப்பால் இருக்கும் பகுதியில் கணக்கெடுக்கப்பட்டு, தாவுகாட்டில் 4 வீடுகளும், நாடார் குடியிருப்பு பகுதியில் 15 வீடுகளும், எஞ்சியுள்ள பகுதியில் 20 வீடுகளும் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு 20ல் 2 வீடுகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் 18 வீடுகளுக்குமாக மொத்தம் 37 வீடுகள் கட்ட 2010ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் 2011, 2012, 13, 14, 15 மற்றும் 2016 என 5 ஆண்டுகளுக்கு மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு வீடுகள் கட்டித்தரப்படும் என் புதுவலசை ஊராட்சிமன்ற அலுவலர்கள் தெறிவிக்கிறார்கள்.