காயிதே மில்லத் நகரில் தீவிபத்து

27/09/2009 15:51

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

27-9-2009

புதுவலசை காயிதே மில்லத் நகரில் இன்று காலை 7.45 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

சகோதரர் நாராயணன் வீட்டுத் தோப்பில் கிழக்கு மூலையில் இருந்த குப்பைகளை ஒதுக்கி தீயிட்டு இருக்கிறார். தீ மல மல வெனப்பரவி அருகிலிருந்த பனையில் தாவியது. மக்கள் வந்து தீயை அனைக்கும் முன் அருகிலிருந்த தோப்பில் பறவி ஒரு குடிசை எறிந்து முற்றிலும் தரைமட்டமாகி விட்டது. தீ மின் கம்பத்தில் பரவியதால் வயா்மேன் பாலு விரைவாக வரவளைக்கப்பட்டு மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடி தீயை அனைத்தனர்.

அருகில் வீடுகள் இல்லாத காரணத்தால் பெரும் சேதம் தவிற்க்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....