காயிதே மில்லத் நகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை

24/12/2011 19:18

ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் பெரும் அவதிக்குள்ளாகும் பகுதியாக காயிதே மில்லத் நகர் பகுதி அமைந்துவிட்டது. மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் பெருமளவுக்கு தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூராக பல மாதங்கள் வரை நீடிக்கிறது. அது மட்டுமல்லாமல் நோய் தொற்று அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உமர் ஊருணி - பனைக்குளம் சாலையின் நடுவே குழாய் அமைத்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.