காவல்துறையை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்: பேரணாம்பட்டில் பரபரப்பு

29/09/2010 15:02

வேலூர் மாவட்டம் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பேரணாம்பட்டில் சாகுல் அமீது என்ற இஷ்லாமிய இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்தார். இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்ற பேச்சு எழுந்தது.

இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் இக்கொலையை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும்மென கோரிக்கை விடுத்தனர். 2 மாதம் முடிந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் காவல்துறை சுணக்கம் காட்டுகின்றனர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்மென கேட்டு பல முறை காவல்துறை அதிகாரிகளை சந்தித்தும் நடவடிக்கையில்லை.

கொலைகாரர்களை கண்டுபிடிக்காத காவல்துறையை கண்டித்து பேராணாம்பட் நகரில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, மேல்விஷாரம், பள்ளிகொண்டா போன்ற பகுதிகள் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதி.

இங்குயெல்லாம் சென்று காவல்துறையை கண்டித்து பேரணாம்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அயோத்தி தீர்ப்புக்கு மறுநாள் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் பேராணாம்பட் பகுதியே பரபரப்பாகவுள்ளது.

Nakkeeran