காஷ்மீர் பிரச்சனை ஆய்வரிக்கையை சமர்பித்தது சிறப்புக் குழு

03/11/2010 12:53

 

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரிவினைவாத குழுக்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் 2-11-10 அன்று கையளித்தது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பேச்சுவார்த்தையாளர் குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது.

பத்திரிக்கையாளர் திலீப் பட்கோங்கர், மத்திய தலைமை தகவல் ஆணையர் எம்.எம்.அன்சாரி, கல்வியாளர் பேராசிரியர் ராதா குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு, காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பேசி அது தொடர்பான அறிக்கையை தயார் செய்தது.

இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தனர்.

அப்போது ஜம்மு காஷ்மீரில் தாங்கள் மேற்கொண்ட பயணம் மற்றும் சந்தித்த நபர்கள் குறித்த விவரங்களையும், அவர்கள் கூறிய கருத்துக்களையும் எடுத்துரைத்த அவர்கள், அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவரிடம் கையளித்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்த திலீப் பட்கோங்கர், அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் விடயங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். webdunia.com