காஷ்மீர் மக்களுக்கு உதவ தயார்: ப.சிதம்பரம்

31/10/2010 12:38

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ வீரர்கள் உள்பட 183 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள், பாலங்கள் சேதம் அடைந்தன. இங்கு நடைபெறும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முன் பேசிய ப.சிதம்பரம், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மத்திய அரசு நன்றாக அறியும். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசும், மாநில அரசும் செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மறுவாழ்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் மத்திய அரசின் உதவிகள் விரைவில் கிடைக்கும் என்றார்.

Nakkheeran.in