காஷ்மீர் மாநிலத்தில் முதன் முதலாக ஒரு பெண் ஐ.ஏ.எஸ் தோ்ச்சி

15/05/2011 09:39

காஷ்மீர் மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் பல்வேறு தாக்குதல்களால் இன்னல்களுக்கான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் , கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்னடவு ஏற்பட்டது . இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதன் முதலாக ஷா பைசால் என்ற மருத்துவ மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வானார். இ‌வரே மாநிலத்தின் முதல் ஐ.ஏ.எஸ்.மாணவர். இதனையடுத்து இம்மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் லடாக் பகுதியைச் சேர்ர்ந்த ஒவேஷா இக்பால் என்ற பெண் ஐ.ஏ.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்துமேலும் 5 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று்ள்ளனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மாணவி ஓவிஷா இக்பால் கூறுகையில், மாநிலத்தின் முதல் ஐ.ஏ.ஏஸ்.ஆக தேர்வு பெற்ற ஷா பைசால் வெற்றி பெற்றது ஒரு தனி நபரின் சாதனை அதுவ‌ே எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது என்றார்.

தினமலர் 15-5-2011