கீழக்கரை அருகே இஞ்சினியரிங் கல்லுரி பேருந்துடன் அரசு பேருந்து மோதல் : 2 பேர் பலி

01/12/2010 17:12

கீழக்கரை அருகே இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர்.  கீழக்கரையில் இருக்கும் முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி பஸ், ராமநாதபுரத்தில் இருந்து மாணவர்களுடன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. கல்லூரி பஸ்சும் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பஸ்சில் பயணித்த பல்லவச்சேரி வேலு மகள் மேகலா ( 12) மற்றும் வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்த குருசாமி ஆகியோர்  இறந்தனர். கல்லூரி வாகனத்தில் வந்த மாணவர்கள் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ராமநாதபுரம் டி.எஸ்.பி., பெருமாள் ராமானுஜம் விசாரித்து வருகிறார். dinamalar.com