குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்பு வழங்க தடை நீங்கியது

27/10/2010 09:38

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்பு வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் இன்று விலக்கியது.

குஜராத் கலவர வழக்குகளில் தீர்ப்பு வழங்க தடை விதித்து கடந்த மே மாதம் 6 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் இன்று அந்த தடையை நீக்கி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், பி.சதாசிவம் மற்றும் அஃப்டாப் ஆலம் ஆகியோரடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி கொலை வழக்கு விசாரணையில் மட்டும் தீர்ப்பை வெளியிட தடை விதித்துள்ளது.

மேலும், ஜாப்ரி கொலை தொடர்பான குல்பர்கா சொசைட்டி வழக்கை விசாரித்த நீதிபதியை இடமாற்றம் செய்தது குறித்து பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

webdunia.com