குஜராத் கலவரங்களில் சேதமடைந்த தலங்களின் விவரங்களை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது

10/07/2012 09:08
குஜராத் அரசுக்கு கேள்வி!
 
'வெள்ளத்திலோ, பூகம்பத்திலோ ஒரு வீடு தரைமட்டமாகிறது, அடித்துச் செல்லப்படுகிறது என்றால் இழப்பீடு கொடுக்கிறீர்கள், பிறகு ஏன் மதத் தலங்களுக்கு செய்ய முடியாது?'
 
 

குஜராத்தில் 2002 கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் விவரங்களை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:- 

குஜராத் கலவரத்தின்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மறறும் சேதப்படுத்தப்படட வழிபாட்டு தலங்கள் பற்றிய விவரங்களை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். கலவரங்கள் அல்லது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்யும். 

குஜராத் கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று மாநில அரசு அளவிட வேண்டும். 

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு பணத்தை கலவரத்தில் சேதமடைந்த கட்டிடங்களுக்கு செலவழிக்க இடமில்லை என்ற வாதம் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்:

'வெள்ளத்திலோ, பூகம்பத்திலோ ஒரு வீடு தரைமட்டமாகிறது, அடித்துச் செல்லப்படுகிறது என்றால் இழப்பீடு கொடுக்கிறீர்கள், பிறகு ஏன் மதத் தலங்களுக்கு செய்ய முடியாது?' என்று கேள்வி எழுப்பினர்.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 535 வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. அதில் இன்னும் 37 தலங்கள் சீரமைக்கப்படவில்லை என்று அரசு சாரா பொதுநல அமைப்பு கூறியுள்ளது.

https://tamil.webdunia.com/newsworld/news/national/1207/09/1120709021_1.htm