குடி போதையில் இந்திய பள்ளி மாணவர்கள் : அதிர வைக்கும் ஆய்வு முடிவு

17/10/2010 16:28

Students Drinkingஇந்தியாவின் பெரிய நகரங்களில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தினருக்கு குடிப் பழக்கம் இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பெற்றோர், உறவினர்கள் எக்கச்சக்கமாய் தரும் பாக்கெட் மணியும், நண்பர்கள் வட்டாரமும்தான் என தெரிய வந்துள்ளது.

இந்திய பெருநகரங்களில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்களில் 45 சதவிகிதத்தினர் அதிகமாக மது அருந்துகிறார்கள். ஒரு மாதத்தில் 5 முதல் 6 தடவை மது அருந்துகின்றனர் என்று அசோசேம் நடத்திய கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் டெல்லி, மும்பை, கோவா, சென்னை, ஹைதராபாத், பூனே, சன்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள 2,000 மாணவ, மாணவியர்கள் பங்குபெற்றனர்.

 
கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களின் குடிப்பழக்கம் 100 சதவிகிதம் அதிகரி்த்திருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் தாராளமாய் கொடுக்கும் பாக்கெட் மணி.

வெளிநாட்டு மது வகைகள் இங்கு சுலபாமாக கிடைக்கிறது. மேலும், பெற்றோர்களின் கண்காணிப்புக் குறைவினால் மாணவர்கள் அதிக அளவில் மது அருந்துகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

Thats Tamil