குண்டு வீச்சு: விருதுநகரில் 18 பேர் கைது

30/10/2010 19:30

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள புதுப்பட்டி கிராமம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி சுரேஷ் (24). டிராக்டர் டிரைவர். சில தினங்களுக்கு முன் செங்கல் சூளைக்கு மண் அள்ளுவதற்காக கண்மாய்க்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். 
 

 

இதையடுத்து, திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், எஸ்ஐ பழனிக்குமார் மற்றும் போலீசார் புதுப்பட்டி கிராமத்தில் வீடு, வீடாக வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

மேலும் பிடிபட்ட கொந்தவராயன்குளம் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமியிடம் (40) நடத்திய விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜூக்கு நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொடுத்ததாக ஒத்துக் கொண்டார்.

பொன்ராஜ் வீட்டில் சோதனை நடத்திய போது, மாட்டுத்தொழுவத்தில் ஒரு நாட்டு வெடிகுண்டு சிக்கியது. அதை பறிமுதல் செய்து செயலிழக்கச் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் தினகரன் (30), துரைச்சாமி (23), வீராச்சாமி (40) உள்பட 18 பேரை நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பொன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுப்பட்டி கிராமத்துக்குள் சென்றபோது, திடீரென மர்ம நபர்கள் அவர் மீது வெடிகுண்டு வீசினார். இதில் படுகாயமடைந்த அந்தோணி சுரேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Nakkheeran.com