குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு சலுகையை நீட்டிக்க வேண்டும்

31/10/2010 10:16

குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பு சலுகை ஆணையை நீட்டிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி மூலம் 2008, 2009, 2010 ஆகிய மூன்று வருடங்களில் குரூப் 1 தேர்வை நடத்தி உள்ளது. 

இத்தேர்விற்கான வயது வரம்பு 21&35 வரை. கடந்த ஆட்சியில் வேலை நியமன தடைச்சட்டம் இருந்ததால் புதிதாக பதவியேற்ற தமிழக அரசு வயது வரம்பு சலுகையை 5 ஆண்டு நீட்டித்து அரசு ஆணை வழங்கியது.

இதனால் வயது முடியும் தருவாயில் இருந்த மாணவ-மாணவியர் பெரிதும் பயனடைந்தனர். இந்த வயது வரம்பு நீட்டிப்பு அரசு ஆணை வரும் ஜூலை 2011ல் முடிவடைவதாக தெரிகிறது.

தமிழக அரசு வயது வரம்பு சலுகையை மேலும் நீட்டித்தால் 35 வயதில் இருந்து 40 வயதிற்குள் உள்ள மாணவ-மாணவியர் பயன்பெறுவர். எனவே, வயது வரம்பு சலுகையை நீட்டிக்க வேண்டும்.

 

Nakkheeran.in