குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

28/01/2011 11:24

 

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினகுரூப் 1 தேர்வுக்கவிண்ணப்பி‌க்க இன்றகடைசி நாள் ஆகும்.

துணை ஆ‌ட்‌சிய‌ர், காவ‌‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் உள்பட 8 விதமான உயர் பதவிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்1 தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.

இ‌ந்தாண்டு, துணை ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வணிகவரித்துறை உதவி ஆணைய‌ர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 131 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.

சென்னையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் மட்டுமின்றி மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களிலும் குரூப்1 தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் அண்ணா சாலை, பாரிமுனை தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.
 

 

தமிழ் வெப்துனியா 28-1-2011