குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டம்: மத்திய அரசு

03/11/2010 12:54

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் பள்ளிக் குழந்தைகள், சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அனைவரும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள். குழந்தைகள் சுதந்திரத்தை இச்சட்டம் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார்.

nakkheeran.in

 

திருநெல்வேலி கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்த பா. வேலு என்ற கழுதை வேலு (52).  இவர் கடந்த மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசினார். இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்துக்கது.