கூட்டுக் குர்பானி 2011 அறிவிப்பு

15/10/2011 23:08

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் துல்ஹஜ் மாதத்தின் குர்பானி கடமையை கூட்டாக நிறைவேற்றும் திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகிறோம் இதில் நமதூர் ஏழைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையில் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 80 ஏழைகள் வரை வருடாவருடம் பயன் பெற்று வருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ். 

 

இன்ஷாஅல்லாஹ் இந்த வருடம் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானிக்காக 1 பங்கின் விலை ரூபாய் 1500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் உங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு புதுவலசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

 

துபாய் பங்குதாரர்களுக்கு - 115 திர்ஹம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ஹலீம் (050 8845461) துபை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்