கெலி யுத்தம் வடகொரியா திடீர் அறிவிப்பு

24/12/2010 14:53

 

அணுப்போர் வெடிக்குமா என்ற பதட்டத்தில் உலக நாடுகள்..
அணு குண்டு விலத்தப்பட்ட உலகம் வேண்டும் ஒபாமா

இன்று தனது படைப்பயிற்சியை ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக பேரெழுச்சியுடன் நடாத்திக்காட்டியதாக தென்கொரியா பெருமைப்பட்ட சொற்ப நேரத்தில் கெலி வோர் எனப்படும் சொற்பதத்தை வடகொரியா அறிவித்து அணுகுண்டு பாவிக்கும் இறுதிப்போருக்கு தாம் தயார் என்று பிரகடனம் செய்துள்ளது. வடகொரிய எல்லைக்கு சுமார் 30 கி.மீ தொலைவில் தென்கொரியா நடாத்தப்போவதாக அறிவித்துள்ள பயிற்சிகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஏற்கெனவே வடகொரியா தெரிவித்திருந்தது. சற்று முன் வடகொரிய படைத்துறை அமைச்சர் கிம் யாங் சான் அணு ஆயுதத்தாக்குதலுடன் கூடிய இறுதிப் பெரும் போருக்கு தாம் தயார் என்று அறிவித்துள்ளமை உலகில் அணுப்போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வழமையாக அல்குவைடா பாவிக்கும் கெலி வோர் என்ற சொற்பதத்தை முதற்தடவையாக வடகொரியா பாவித்திருப்பதும் ஆழ்ந்த கவனிப்பிற்குள்ளாகியுள்ளது. இதற்கு சற்று முன் கருத்துரைத்த தென் கொரியா தம்மீதான தாக்குதலை வடகொரியா அறிவித்தால் அதை எதிர் கொள்வதைவிட வேறு வழியில்லை என்று கூறியுள்ளது. தென் கொரியா 2010 ம் ஆண்டு 47 இராணுவப் பயிற்சிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவுடனான போர் வெடிக்குமானால் பெருந்தொகையான வடகொரிய அகதிகள் சீனாவுக்குள் நுழைவார்கள், அவர்களின் பாரத்தை தாங்குவது சீனாவிற்கு பெரும் சிரமமாகும். அதேவேளை ஒரு பெரும் யுத்தத்தை ஆரம்பிக்காமல் மக்களை பட்டினியிலேயே வைத்து மரணமடையச் செய்வதை விட போரை சந்திப்பதே வடகொரியாவுக்கு வசதியாக இருக்கும். ஐ.நாவின் பாதுகாப்பு சபை நேற்று முன்தினம் அவசரமாகக் கூடியபோதும் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஒரு புறமும் சீனா, ரஸ்யா மறுபுறமுமாக நின்றதால் முக்கிய முடிவுகள் எதுதையும் எட்டமுடியவில்லை. ஆனால் அடுத்தாண்டு மேலும் சுமார் 9 வீதம்வரை வளரப்போகும் சீனப்பொருளாதாரம் வட – தென் கொரிய போரை தவிர்ப்பது மிகக்கடினமே. ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் அடையும் வளர்ச்சிக்கான பதிலடியை இது போன்ற நிகழ்வுகளால் சந்திக்க நேரிடும் என்பதை மறுப்பது கடினமே. எதிர்வரும் தை 19ம் திகதி சீனா – அமெரிக்கா இருநாடுகளும் நாணயமாற்று தொடர்பான முக்கிய நெருக்கடியான பேச்சுக்களை நடாத்தவுள்ளன. அதற்குள் நிலமை வெடிப்படையுமா என்பதே இப்போது முக்கிய கேள்வியாகும்.

கொரியாவில் வெடிக்கும் போரினால் சீனாவின் பொருளாதாரத்திற்கு பங்கம் வருமானால் சீனா மேலும் பல காரியங்களை ஆற்ற முற்படும். சீனா இரண்டு வாரங்களுக்கு முன் 200 மில்லியாட் குறோணருக்கு பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான், வட – தென் கொரியா, ஈரான் அணுகுண்டு இவைகளின் மீதான அதிர்வலைகளே அடுத்த சில ஆண்டுகளுக்கு முக்கியம் பெறப்போகின்றன. நேற்று அமெரிக்க அதிபர் அணு குண்டுப் போர் விலத்தப்பட்ட உலகம் என்று பேசிய பேச்சு காதுகளில் இருந்து மறைய முன்னர் வடகொரியாவின் அணுப்போர் அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.

alaikal.com